சுவாமிகளின் ஆசிச்செய்தி

வடமாகாணத்தில் அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து 'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம்' எனும் பெயரில் ஓர் தொழிற்சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. 

எந்தவொரு சேவையிலுள்ளவர்களும் அவ்வவ் சேவையிலுள்ளவர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இவ்வாறான தொழிற்சங்கங்களை உருவாக்கி அதன்மூலம் தத்தம் தேவைகளை, குறைபாடுகளை, உதாரணமாக உரியகாலத்தில்பதவி உயர்வுபெறல், அதற்கான பரீட்சைகளை நடாத்துதல், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சேவைசார்ந்த பணிப்புரைகளைப் பெறல் போன்றனவற்றை தீர்க்கக்கோரும் கோரிக்கைகளை அறத்தின் வழி நின்று முன்வைக்கும் போது அவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது இலகுவாகும். 

வடமாகாண அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தொடர்பாடல்களை இலகுபடுத்தும் முகமாக தொழிற்சங்கத்திற்கான இணையத்தளம் ஒன்றை இன்று அங்குரார்ப்பணம் செய்துவைப்பது சிறப்பாகும். 

'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணம்' அதன் அங்கத்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஏகோபித்த குரலில் தமது கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றுக்கான தீர்வினைப் பெற்று மண்ணில் நல்லவண்ணம் வாழ ஆசிவேண்டி எல்லாம் வல்ல நல்லைக் கந்தப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன். 

இறைபணியில்
'தவத்திரு' வேலன் சுவாமிகள்
சிவகுரு ஆதீனம்
யாழ்ப்பாணம். 

Share This :