தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம்' என்ற மகவு ஒளியூட்டி நம்மையெல்லாம் மகிழ்வூட்டி இணையத்தில் மணம் பரப்பி இலகுவாக கையாளக்கூடிய வகையில் புன்னகைத்து வியத்தகு வகையில் 16.09.2021 திகதி சுபமூகூர்த்த நன்நாளில் உலக வரலாற்றில் உலக வட்டத்தில் நாமும் காலடி பதிக்கும் இந்நாளை கௌரவத்துடன் சிறப்புற வாழ்த்துகின்றேன். 

எமது இச்சங்கமானது உலகவலையமைப்புக்குள் நுழைவதன் மூலம் நாமும், நம் எதிர்காலச் சந்ததியும் பயன் பெறக்கூடிய வகையில் தரமான உயர்நிலையிலே உருவமைக்கப்பட்டுள்ளது. தேவையான தகவல்கள் தரவுகளை ஒரு நொடிப் பொழுதில் பெற்றுக் கொள்வதற்கு ஏற்றவகையில் உயர்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளமை பெருமகிழ்வூட்டும் ஒன்று என்பதற்கு நிகர் வேறில்லை. பல வருடங்களாக இணையவழி மூலம் பயணிக்காது தடம்மாறித் தத்தளித்த அனைவருக்கும் இது ஒருவரப்பிரசாதம் என்றுதான் தான் கூறவேண்டும். இனிவரும் காலங்களில் நாமும் மிகவேகமாகச் சுற்றும் பூமிப்பந்தில் சுலபமாகப் பயணிப்போமாக. 

நீண்டகாலமாக ஒரு இணையவழி உருவாக்கப்படாமை நமது சக உறவுகளுடன் சேர்ந்து பயணிக்காது தனிமைப்படுத்தப்பட்ட நிலை என்று தான் கூறாமல் கூறப்பட உண்மையும் யதார்த்தமுமாகும். எனவே இவ்வழி ஓடோடி வந்து காலச்சக்கர ஓட்டத்தில் கலந்திட வாழ்த்துகின்றேன். 

செல்லத்துரை செல்வானந்தம்
தலைவர்    

Share This :